முகத்தில் பிம்பிள் அதிகமா வருதா? அதனை போக்க இதோ சில டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு

பொதுவாக ஒருவருக்கு அதிக மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, எண்ணெய் பசை சருமம் போன்ற பலவற்றால் முகப்பரு வருவதுண்டு.

இது முகத்தினை அழகையே கெடுத்துவிட கூடிய இருக்கின்றது. அதிலும் சிலருக்கு பிம்பிளானது கடுமையான வலியை உண்டாக்கக்கூடியதாக இருக்கும்.

இப்படி அழகை கெடுத்து, வலியைத் தரும் பிம்பிளைப் போக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • சிறிது வேப்பிலை பொடி அல்லது நற்பதமான வேப்பிலையுடன், ரோஸ் வாட்டர், தயிர், எலுமிச்சை சாறு, தேன், க்ரீன் டீ இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

  • ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் முழுவதும் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பிம்பிள் வருவதை தடுத்திடலாம்.

  • மஞ்சள் தூளை தயிர் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, முகம் பொலிவோடும் சுத்தமாகவும் காணப்படும்.

  • சிறிது முல்தானி மெட்டி பொடியை ஒரு பௌலில் எடுத்து, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். ன் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் பிம்பிள் விரைவில் மறைவதோடு, சரும நிறமும் மேம்பட்டு காணப்படும்.

  • முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதில் பேக்கிங் சோடா பிம்பிளைப் போக்கும் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளைப் போக்கும்.

  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி துடைத்துவிட்டு, பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் இதில் உள்ள எலுமிச்சை பிம்பிளை சுருங்கச் செய்யும். அதே சமயம் தேன் சருமத்திற்கு ஊட்டமளித்து, பிம்பிளால் ஏற்படும் தழும்புகளைப் போக்கும்.

  • சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் நீருடன் கலந்து, பிம்பிள் உள்ள இடத்தில் தடவி காய வைக்க வேண்டும். சிறப்பான பலனைப் பெற நினைப்பவர்கள், ஆப்பிள் சீடர் வினிகருடன் முல்தானி மெட்டி, மஞ்சள் தூள் அல்லது வேப்பிலை பொடி என ஏதாவது ஒன்றை சேர்த்து பயன்படுத்தலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்