இனி கவலை வேண்டாம்... இதை சாப்பிட்டாலே போதும் கொட்டுன முடி திரும்ப வளரும்

Report Print Gokulan Gokulan in அழகு

இன்றைய சூழலில் பெரும்பாலனவர்களுக்கு முடி கொட்டுதல், இளநரை, வழுக்கை, பொடுகு போன்றவை தலையாய பிரச்னையாக உள்ளது.

ஒரு நாளைக்கு எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை பொறுத்தே, அது இயல்பானதாஅல்லது பிரச்சினையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

பொதுவாக, ஒரு நாளைக்கு 50 - 100 முடிவரை உதிரலாம். கவலைப்படத் தேவையில்லை. ஆனால், 100 முடிக்கும் அதிகமாக, கொத்துக் கொத்தாகக் கொட்டும்போது, அது பெரிய பிரச்சினை ஆகிறது.

முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம், பெரும்பாலானோருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக முடி உதிரலாம்.

அவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

லச்சிக்கல் மற்றும் சிறுநீர் கோளாறு பிரச்சனை இருபவர்களின் இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து முடி கொட்ட ஆரம்பிக்கும்.

வேறு ஏதேனும் நோய்க்காக மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு அந்த மாத்திரையின் பக்க விளைவு காரணமாகவும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.

ஆண்களின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்.

ஒரு சிலருக்கு பூஞ்சை தொற்று காரணமாக புழு வெட்டு பிரச்சனை அதாவது தலையில் ஆங்காங்கே திட்டு திட்டாக முடி உதிர்வு ஏற்படும்.இப்பிரச்சனை உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயம் அல்லது பூண்டை அரைத்து தேய்த்து வந்தால் முடி வளர ஆரம்பிக்கும்.

வெங்காயம் மற்றும் பூண்டில் இயற்கையாகவே சல்பர் நிறைந்துள்ளது. முதலில் முடி உதிர்வுக்கு சரியான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கான தீர்வினை பெற முயற்சிக்கலாம்.

எனவே முதலில் முடி உதிர்வுக்கு சரியான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கான தீர்வினை பெற முயற்சிக்கலாம்.

இயற்கையிலேயே எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் முடி உதிர்வுக்கான சரியான தீர்வுகள் குறித்து கீழ்க்கண்ட வீடியோவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்