செலவே இன்றி சருமத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை முறையில் நீக்கனுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு
185Shares

பிளாக்ஹெட்ஸ் என்பது லேசான வகை முகப்பரு ஆகும். இது முகத்தில் மட்டும் அல்லாமல் கழுத்து, முதுகு, மார்பு, கைகள் மற்றும் தோள்களில் கூட பிளாக்ஹெட்ஸ் தோன்றும்.

இவை முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும்.எனவே இதனை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது.

இதற்காக அதிக பணம் செலவழித்து தான் கிறீம்கள் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் இதனை நீக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ரோஸ் வாட்டருடன் கடலை மாவைப் பயன்படுத்தி தோலில் மசாஜ் செய்யவும். இது ஒரு சில நிமிடங்கள் இருக்கட்டும், பின்னர் கழுவலாம். ஒரு காட்டன் துண்டு எடுத்து கொள்ளுங்கள். இதை மந்தமான நீரில் நனைத்து சருமத்திற்கு ஒரு நிமிடம் தடவவும். இது சருமத்தை மென்மையாக்கும் மற்றும் பிளாக்ஹெட்ஸ் எளிதில் வெளியே வரும்.
  • 2 தேக்கரண்டி பட்டை பொடி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்யவும்.
  • மூன்று தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும். அதை மெதுவாக மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
  • ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பிறகு சுத்தமாக கழுவினால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து சருமம் பளபளக்கும்.
  • தயிர், ஓட்ஸ், எலுமிச்சை சாற்றின் சில துளிகள் அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தோலில் ஒரு நிமிடம் வைக்கவும். இது ஐந்து நிமிடங்கள் இருக்கட்டும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்