உங்களுக்கு கீழ் தாடை ரொம்ப பெருசா இருக்கா..? இதனை எப்படி குறைக்கலாம்

Report Print Kavitha in அழகு
389Shares

இரட்டை தாடை உங்கள் முக அழகை குறிப்பாக கன்னத்தின் அழகை கெடுக்க கூடியது. இது முகத்தின் அழகையே மாற்றிவிடுகின்றது.

தாடையைச் சுற்றி கொழுப்பு கூடுதல் இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக் நேரிடும்.

அந்தவகையில் கன்னத்தின் கீழ் உள்ள அதிகப்படியான கொழுப்பைப் போக்க குறைந்த ஒரு சில இயற்கை வழிகள் உதவுகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் வரை சர்க்கரை சேர்க்காத சூயிங்கம் மெல்வது நிச்சயம் நல்ல பயிற்சியாக இருக்கும். இது டபுள் சின்னுக்கு வேகமாக தீர்வு தரக்கூடியதும் கூட. இது தாடை வரிசை தசைகளுக்கு பயிற்சி என்பதோடு கூடுதலாக ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிக்கவும் உதவுகிறது.

  • இரண்டு டீஸ்பூன் அளவு கோக்கோ வெண்ணேய் எடுத்து மிதமான அளவில் சூடு செய்யவும். இது குளிர்ந்தவுடன் முகத்தில், தொண்டை மற்றும் கன்னம் இருக்கும் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யவும். தினமும் காலை குளிப்பதற்கு முன்பும் இரவு தூங்குவதற்கு முன்பும் இந்த மசாஜ் செய்துவர வேண்டும். கூடுதலாக முகத்துக்கு ஜொலிப்பும் இருக்கும்.

  • கிளிசரின் உடன் அரை டீஸ்பூன் எப்சம் உப்பு, சில துளி ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து அதை கன்னம், கழுத்து பகுதியில் தடவ வேண்டும். இதை 20 நிமிடங்கள் கழித்து குளிந்த நீரில் கழுவவும். எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் செய்துவிடுங்கள். வாரத்துக்கு 4 முதல் 5 முறையாவது செய்து விடுங்கள்.

  • இரண்டு டீஸ்பூன் விட் ஜெர்ம் ஆயில் எடுத்து கன்னத்தின் கீழ் அடிப்பகுதியில் இருந்து சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இதை செய்யுங்கள். அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை இதை செய்து மறுநாள் காலை முகத்தை கழுவி எடுத்தால் டபுள் சின் குறையும். மசாஜ் செய்யும் போது தொண்டையில் இருந்து கழுத்துவரை மசாஜ் செய்தால் போதும்.

  • இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் பால், புதினா எண்ணெய், தேன் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். நன்றாக கலந்து இதை முகம், கழுத்து, கன்னம் பகுதியில் இருக்கும் தோலில் தடவி 45 நிமிடங்கள் வரை உலர விடவும். குறிப்பாக தாடையில் நன்றாக கழுவ வேண்டும். விரைவான முடிவுகளுக்கு தினமும் அல்லது வாரம் இருமுறை இதை செய்யுங்கள்.

  • எடை இழப்புக்கு க்ரீன் டீ உதவுவது போன்று, தாடை இழப்புக்கும் க்ரீன் டீ உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வதால் அதிக கலோரி இழப்புக்கும் இது உதவுகிறது. அதனால் காஃபி, டீக்கு மாற்றாக க்ரீன் டீ எடுத்துகொள்வதும் இரட்டை தாடையை குறைக்க உதவும்.

  • கன்னத்தின் அளவையும் குறைப்பதற்கும் தண்ணீர் அதிகமாக குடியுங்கள். குறைந்தது 10 முதல் 12 டம்ளர் நீர் குடிப்பதை அருந்துங்கள்.உடலி நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் உடல் நச்சுக்களை வெளியேற்றுவதால் உடலில் நீர் தேக்கமும் குறையக்கூடும். முகத்தின் டபுள் சின்னத்தையும் குறைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்