முகப்பரு அதிகமா இருக்கா ? இதனை போக்க இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
366Shares

முகத்தின் அழகை சீர்குலைக்கும் முகப்பருக்கள் பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் பாடாய்ப்படுத் துகிறது என்றே சொல்லலாம்.

முகப்பருக்களைப் பார்த்ததுமே சிலர் அதைக் கிள்ளி எறிய முயற்சி செய் வார்கள். இதனால் பருக்கள் அதிகமாகுமே தவிர குறையாது.

மேலும் சமயங்களில் அவை கருப்பு நிற தழும் பாக மாறி முகத்தின் நிறத்தையும் பொலிவையும் கெடுத்துவிட வாய்ப்புண்டு.

எனவே இவற்றை எளிய முறையில் சரி செய்ய ஒரு சில பொருட்கள் உதவுகின்றன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கற்றாழையின் மடலில் இருக்கும் நுங்கு போன்ற ஜெல்லை எடுத்து நன்றாக கசக்கி அதில் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். இதை முகம் முழுக்க தடவி உலரவிட்டு வெதுவெதுப்பான அல்லது மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.

  • எலுமிச்சைச்சாறுடன் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து அதில் முல்தானிமிட்டியை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். கட்டிதட்டியில்லாமல் கலக்கி முகத்தில் முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் கவனம் செலுத்தி தடவி எடுக்கவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். இது முகப்பருவுக்கு நன்றாக தீர்வு கொடுக்கும்.

  • கிராம்பை இடித்து மைய அரைத்து பன்னீர் சேர்த்து மைய அரைக்கவும். இதை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி விடவும். நீண்ட நேரம் உலரவிட்டால் பலன் கிடைக்கும். இரவு நேரங்களில் இதை தடவி வந்தால் சில நாட்களிலேயே பலன் தெரியும். இது முகப்பருக்களை வேரொடு அகற்றும்.

  • முதலில் பூண்டை பயன்படுத்துபவர்கள் பூண்டு பற்களை பன்னீரில் நனைத்து 5 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு இடித்து தேன் கலந்து பேஸ்ட் போல் கலக்கவும். இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.

  • உருளைக்கிழங்கு தோல் உரித்து நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.இதை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை கழுவி எடுக்கவும்.

  • தக்காளியை மசித்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி விடவும். இவை உலர உலர மீண்டும் மீண்டும் இரண்டு முறை தடவி பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்யலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்