செலவே இல்லாமல் முகத்தில் இருக்க முடியை நீக்க வேண்டுமா?

Report Print Kavitha in அழகு
542Shares

பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் மீசை வளர்வதைப் பார்த்திருப்போம்.

ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும்போது முகத்தில் தேவையற்ற முடி வளர்கிறது.

இந்த பிரச்சினையால் பெண்கள் வெளியில் செல்லவே கூச்சப்படுவார்கள். இதனை வீட்டில் இருந்து கூட எளிய முறையில் அகற்ற முடியும். தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம்.

  • தண்ணீரில் மஞ்சள் தூளை பேஸ்ட் ஆக்கி முகத்தில் அப்ளே செய்யுங்கள். சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருங்கள். இது முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க உதவுகிறது. உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் துணியை முக்கி துடைத்து எடுங்கள். உங்க முகத்தில் உள்ள தேவையற்ற முடி உதிர ஆரம்பிக்கும்.

  • கடலை மாவு மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்ட்டை தயாரியுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளே செய்து உலர விடுங்கள். உலர்ந்த பிறகு அதை நீக்க வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து ரிமூவ் செய்யுங்கள்.

  • ஒரு முட்டையில் வெள்ளைக் கருவை எடுத்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளே செய்து வாருங்கள். இது முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க உதவுகிறது. உலர்ந்த பிறகு முடிகளை மெதுவாக பிடுங்கினால் கூட வரும். இது உங்களுக்கு சிறிது வலி மிகுந்ததாக இருந்தால் கூட உங்களுக்கு நல்ல பலனை தரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்