வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்த தகவலே.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முக அழகிற்கும் பெரிதும் பயன் அளிக்கின்றது.
இது முகம் மற்றும் தோல்களில் உள்ள பருக்கள், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க பயன்படுகிறது.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வெற்றிலை
- சுத்தமான தேன்
- கடல் உப்பு
செய்முறை
வெற்றிலைகளை, சுத்தமான நீரில், 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
வெற்றிலையில் உள்ள தண்டு பகுதிகளை நீக்கிவிட வேண்டும். இதை மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒன்றரை தேக்கரண்டி சுத்தமான தேனை சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காத்திருக்கவும்.
பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். முகத்தில் உள்ள பருக்கள், முகப்பரு, கரும்புள்ளி கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை கண்கூடாக காணலாம்.