உங்கள் முகம் மிக மென்மையாக அழகாக வேண்டுமா? அப்போ இந்த பழத்தை வைத்து பேஷியல் பண்ணுங்க!

Report Print Nalini in அழகு
0Shares

ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று தான் பார்த்திருப்போம். ஆனால் அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சருமத்தை அழகாக்கவும் பெரிதும் பயன்படுகின்றன.

ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தை பொலிவாக்க, இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து சருமத்திற்கு ஒருசில ஃபேஸ் மாஸ்க் செய்தால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் மற்ற கிருமிகள் நீங்கி, சருமம் பட்டுப் போன்று இருக்கும்.

பைன்ஃபெரிஸ் என்பவை வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகள். இவை சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளை விட ஆரோக்கியமானவை. பைன்பெர்ரிகள் ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்தவை மற்றும் இன்னும்பிற உடல்நல நன்மைகளையும் வழங்க வல்லவை. வட அமெரிக்காவில் பைன்பெர்ரிகளை சிலோயென்சிஸ் எனவும், அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் அதை அனனேசெர்டெபெர் என்றும் அழைக்கின்றனர்.

சருமப் பொலிவு :

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்ற்ம் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

உதடு அழகிற்கு

உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும். ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன்:

ஸ்ட்ராபெர்ரி போன்ற அழகான நிறத்தில் கன்னத்தை பெறுவதற்கு, 2-3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை:

இது மற்றொரு சிறந்த முறை. அதிலும் எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு சூப்பர் காம்பினேஷன். அதற்கு அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிர்:

சருமம் நன்கு இறுக்கத்தோடு, இளமைப் போன்று காணப்படுவதற்கு, 3-4 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன், 1-2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவிட வேண்டும்.

மென்மையான சருமத்துக்கு

ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து காய்ச்சாத பால் ஒரு டீஸ்பூன் கலந்து மிக்ஸியில் அடிக்கவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும். முகம் பொலிவு பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்