முதல் 6 மாதங்களில் சிறந்த திறனை வெளிப்படுத்திய சிலோன் இன்டெக்ஸ் நிதியம்

Report Print Shalini in வர்த்தகம்

இலங்கையில் உள்ள 78 நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி நிதிய முதலீடுகளில் (Unit Trusts), சிலோன் இன்டெக்ஸ் நிதியம் (Ceylon Index Fund) உயர்ந்த செயல் திறன் உடைய Unit Trust ஆக முதலிடம் பெற்றுள்ளது.

சிலோன் இன்டெக்ஸ் நிதியம் (CIF) கொழும்பு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரிய நிறுவனங்களில் (Blue Chip) முதலீடு செய்கின்றது.

2017 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இந்த நிதியம் (CIF) 15.57% செயல்திறனை பெற்றுள்ளது. மேலும், அதே காலப்பகுதியில் அனைத்து பங்கு விலை சுட்டி (ASPI) 8.33% செயல்திறனை பெற்றுள்ளது.

இலங்கையின் Unit Trust Association இனால் CIF ஆனது திறந்த உரித்துவ சுட்டி நிதியமாக (Open Ended Equity Index Fund) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய அளவிலான மற்றும் உயர் வருவாய் ஈட்டும் முதல் பத்து நிறுவனங்களில் இந்த நிதியம் (CIF) முதலீடு செய்கின்றது.

தற்போது JKH,CTC கொமர்ஷல் வங்கி, டயலொக், HNB, ஹேமாஸ், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், மெல்ஸ்டா கோர்ப், செவ்ரன் லுப்றிகன்ஸ், மற்றும் TJ லங்கா ஆகிய நிறுவனங்களை இது உள்ளடக்கியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் தற்போதைய விலை உழைப்பு விகிதமானது (PE Ratio) 10.75x ஆக மதிப்பிடபட்டுள்ளது.

இது இந்தியாவின் மதிப்பில் அரைவாசிக்கும் குறைவானதாகும். அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக தற்போதைய குறைந்த மதிப்பீடுகள் இலங்கை முதலீட்டாளர்களுக்கு கொள்முதல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

“தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் Blue Chip பங்குகளில் தீவிரமாக முதலீடு செய்கிறார்கள்” என்று இலங்கை ஆதன முகாமைத்துவத்தின் (Ceylon Asset Management) முகாமைத்துவ பணிப்பாளர் துலீந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதே நேரம் 2017இன் முதல் அரை ஆண்டில் முதலீட்டு தரத்திலுள்ள நிறுவனங்களின் கடன் பிணையங்களில் முதலீடு செய்யும் சிலோன் மணி மார்க்கட் நிதியம் (Ceylon Money Market Fund) 11.42% வருமானம் (வருடாந்த வருமானம்) ஈட்டியுள்ளது.

சிலோன் டொலர் பொண்ட் நிதியம் (Ceylon Dollar Bond Fund) அமெரிக்கன் டொலரில் வரையறுக்கப்பட்ட இலங்கை இறையாண்மை மற்றும் வங்கி முறிகளில் முதலீடு செய்கின்றது.

2017இன் முதல் அரை ஆண்டில் சிலோன் டொலர் பொண்ட் நிதியம் (CDBF) 5.43% (வருடாந்த) செயற்திறனை வெளியிட்டது.

சிலோன் டொலர் பொண்ட் நிதியம் (CDBF) FITCH தரப்படுத்தலில் B+ சர்வதேச டொலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதுவே இலங்கை நாட்டிற்கும் வழங்கப்பட்டுள்ள சர்வதேச தரப்படுத்தலாகும்.

இலங்கை ஆதன முகாமைத்துவத்தினால் நிதியம் நிர்வகிக்கப்படும் அதே நேரம் நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பாளராக டச்சு வங்கி (Deutsche Bank) விளங்குகிறது.

இலங்கை ஆதன முகாமைத்துவத்துவம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாகும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்