எரிபொருள் விலை நிர்ணயம் மே மாதம் முதல்... மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும்?

Report Print Samy in வர்த்தகம்
168Shares
168Shares
ibctamil.com

எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பிலான விலைப் பொறிமுறைமை எதிர்வரும் மே மாதம் முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற வகையில் இலங்கையில் எரிபொருளுக்கான விலைகளை நிர்ணயம் செய்யும் நோக்கில் இந்த பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நிதி அமைச்சரின் உத்தரவின் பேரில் விலைப் பொறிமுறைமை குறித்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் முதல் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு கட்டம் கட்டமாக விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளின் ஒன்றாகவும், இந்த விலைப் பொறிமுறைமை பற்றி பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மின்சாரக் கட்டணங்களுக்கான விலைப் பொறிமுறைமை பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்