ஐரோப்பாவை பின்தள்ளி சாதனை படைத்த கொழும்பு!

Report Print Vethu Vethu in வர்த்தகம்
300Shares
300Shares
lankasrimarket.com

உலகின் அதிக வளர்ச்சி வீதத்தை வெளிப்படுத்தும் துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் கொள்கலன் செயற்பாடுகள் 16.2 வீத வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலுக்கமைய அதிக வளர்ச்சியை சிங்கப்பூர் துறைமுகம் பதிவு செய்துள்ளது. அதன் வீதம் 16.5 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவின் சியாமென் துறைமுகம் மூன்றாவது இடத்தையும் நான்காம் இடத்தை ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் என்ட்வீப் துறைமுகம் பெற்றுள்ளது.

உலக துறைமுக வகைப்படுத்தலின் கீழ் கொழும்பு துறைமுகத்திற்கு 23 வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த வருடம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் செயல்பாடுகள் 6.2 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்