ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை:தனியார் வங்கிகள் ஏமாற்றம்

Report Print Kalam Kalam in வர்த்தகம்

பண்முக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால், தனியார் வங்கிகள் தங்களால் துவங்க முடியாது என்ற ஏமாற்றத்தில்உள்ளனர்.

பண்முக வங்கி என்பது வங்கி சாரா நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை அளிக்கும் பல்வேறு நிதிச் சேவைகள் அனைத்தையும் பண்முக வங்கிகள் ஒருசேர வழங்கும்.

மேலும் வணிக வங்கிச்சேவை , முதலீடு, காப்பீடு, மியூச்சுவல் பண்டு மற்றும் சூப்பர் மார்க்கெட் எப்படி வழங்குகிறதோ, அது போல அனைத்து விதமான நிதி சேவைகள் அனைத்தையும் பண்முக வங்கிகள் மூலம் பெறலாம்.

பண்முக வங்கி உரிமைக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:

நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் , வங்கி மற்றும் நிதித்துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பண்முக வங்கி தொடங்க குறைந்த பட்சம் 500 கோடி ரூபாய் மூலதானம் பெற்றிருத்தல் வேண்டும். தனியார் நிறுவனங்கள் தொடங்க 5000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு பெற்றிருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களில் மொத்த வருவாயில், வங்கியின் சராசரி நிதி நிறுவங்களின் வருவாய் 40% குறைவாக இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால் உரிமம் வழங்கப்படமாட்டாது, அத்தகைய தொழிற்குழுமங்கள் பண்முக வங்கிகளில் 10% பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கூறியுள்ளதால் ரிலையன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ, பஜாஜ் போன்ற தொழிற்குழுமங்கள் பண்முகவங்கி துவங்க முடியாது என்று ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments