டல்லடிக்கும் தங்கம் விற்பனை: 80 சதவீதம் சரிவு

Report Print Raju Raju in வர்த்தகம்

இந்தியாவில் 500, 1000 ரூபாய் தடையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பணபுழக்க குறைவு காரணமாக தங்கத்தின் விற்பனை அதிரடியான சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 8 ஆம் திகதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பிறகு அந்த நோட்டுகளை நகையாக மாற்ற நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

மக்கள் அதிக அளவில் நகைகள் வாங்கினார்கள், நகை வியாபாரம் அதிகரித்ததால் தங்கத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்களிடம் 500, 1000 ரூபாய் தடையால் பணப்புழக்கம் குறைந்து தற்போது தங்கத்தின் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது.

இதுகுறித்து தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ரூபாய் நோட்டுகள் தடை உத்தரவிலிருந்து நாங்கள் 500, 1000 தாள்களை வாங்குவதில்லை. இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பணபுழக்க குறைவால் தற்போது தங்க வியாபாரம் 80 சதவீதம் குறைந்துள்ளது.

மீதம் உள்ள 20 சதவீதமானது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் நடைபெறும் வியாபாரமாகும்.

இந்த விற்பனை சரிவால் தங்க நகை பட்டறை தொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் காரணம் தங்க இறக்குமதி பெருமளவு தற்போது குறைந்துள்ளது. இந்த விடயத்தில் சீக்கிரம் இயல்பு நிலை திரும்பும் என எதிர்ப்பார்பதாக கூறியுள்ளார்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments