Volvo cars ஸ்ரீ லங்காவில் சகல வசதிகளும் படைத்த சேவை

Report Print Amirah in வர்த்தகம்

IWS ஹோல்டிங்ஸ் குழுமத்தின் புதிய அங்கத்துவ நிறுவனமான Volvo cars ஸ்ரீ லங்கா, தனது சகல வசதிகளையும் படைத்த காட்சியறையை பேலியகொட பகுதியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

20000 சதுர அடி பரப்பிலமைந்துள்ள இந்த 3ளு நிலையம், விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும்.

ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த காட்சியறைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் என கருதப்படுகிறது. 250 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்நிலையம், சர்வதேச தரங்களுக்கு நிகரான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.

Volvo cars வின் புதிய உத்தியோகபூர்வ இறக்குமதியாளரும், விற்பனையாளருமான Volvo cars ஸ்ரீ லங்கா பல புதிய மாதிரிகளை அறிமுகம் செய்துள்ளது.

இதில்,xc90, v40, s60, xc60மற்றும் புத்தம் புதிய s90 ஆகியன அடங்கியுள்ளன. இவை அனைத்தும் அங்குரார்ப்பணத்தின் போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

Volvo cars வின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் உருவாக்கப்பட்டுள்ள s90என்பது, அளவிடக்கூடிய தயாரிப்பு கட்டமைப்பை கொண்டுள்ளதுடன், வாகனங்கள் பாதுகாப்பு துறையில் Volvo carsவின் தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

s90 என்பது சர்வதேச கௌரவிப்பை பெற்றுள்ளதுடன்,ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் ஆண்டின் சிறந்த அலங்காரம் என்பதற்கான விருதையும் தனதாக்கியிருந்தது.

சுவீடனின் வர்த்தக நாமமான Volvo cars பிரதான உள்ளம் சங்களான பாதுகாப்பு,தோற்றம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள Volvo cars காட்சியறை உயர் தர நியமங்களை பேணக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

இந்த காட்சியறையின் மூலமாக, பரிபூரண உதிரிப்பாகங்கள் தெரிவுகள் விற்பனை செய்யப்படும் என்பதுடன், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதாக அமைந்திருக்கும்.

உள்ளக வீல் எலைன்மன்ட் வசதிகளும் காணப்படுவதுடன், நாடு முழுவதிலும் 24 மணி நேர பழுதுபார்ப்பு சேவை வழங்கப்படும். சகல சேவை நிலையங்களிலும், சிறந்த ஏழடஎழ அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில், விற்பனை மற்றும் முன் அலுவலக ஊழியர்கள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டு volvo வின் உலக நியமங்களுக்கமைய பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

iws ஹோல்டிங்ஸ் தலைவர் ஆர்தர் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் இது வரை காலமும் வேறெந்த வாகன விற்பனை நிறுவனத்தினாலும் வழங்கப்படாத ஒன்றுக்கு மேற்பட்ட சேவை அம்சங்களை நாம் எமது காட்சியறையுனூடாக வழங்க முன்வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

புதிய ரக Volvo கார்களை அறிமுகம் செய்வதை எமது பெறுபேராக நாம் கருதுகிறோம். உள்நாட்டு சந்தைக்கு இது மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

Volvo கார்கள் அவற்றின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் போன்றவற்றுக்காக புகழ்பெற்றவை.

மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் designed around you எனும் தொனிப் பொருளுக்கமைய அமைந்துள்ளன.

இந்த வர்த்தக நாமத்துக்கு நாம் உத்தியோகபூர்வ முகவராக செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இதனூடாக ஒப்பற்ற தரம் வழங்கப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.

Volvo cars குழுமத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான உப தலைவர் ஜரி கோஹோனென் கருத்துத் தெரிவிக்கையில்,

லங்கையைச் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு பரிப்பூரண Volvo அனுபவத்தை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

தலைவர் சேனநாயக்க வழிகாட்டலில் iws ஹோல்டிங்ஸ்,இந்த வியாபாரத்தில் குறிப்பிடத்தக்களவு தொகையை முதலீடு செய்துள்ளது.

இதற்கு சிறந்த உதாரணமாக,புதிய Volvo cars விநியோகத்தினூடாக சகல வாடிக்கையாளர்களுக்கும் ஒப்பற்ற சேவை வழங்கப்படுவது அமைந்திருக்கும் என்றார்.

iws ஹோல்டிங்ஸ் குழுமத்தினால், வாகனங்கள், ஆகாய விமான சேவை, கப்பல் போக்குவரத்து, தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல் மற்றும் பொதியிடல், தொழிற்துறை, ஓய்வுநேரம், களஞ்சியப்படுத்தல் மற்றும் சரக்கு கையாளல் மற்றும் ஊடகம் போன்ற துறைகளில் பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments