வீழ்ச்சியில் இருந்து மீண்டது பிரித்தானியா பவுண்ட்: ஏழு மாதங்களுக்கு பின்னர் அதிகரிப்பு

Report Print Vethu Vethu in வர்த்தகம்

வீழ்ச்சியை சந்தித்திருந்த பிரித்தானிய நாணயத்தின் பெறுமதி தற்போது பாரிய அதிகரிப்பை காட்டியுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின்னர் பவுண்ட் பெறுமதி பாரிய அதிகரிப்பொன்றை இன்று எட்டியுள்ளதனை முதலீட்டாளர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பிரித்தானியாவின் quarterly ‘Super வங்கியின் மீது முதலீட்டாளர்கள் தங்கள் அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

வங்கி பொருளாதார கண்ணோட்டத்தை வெளியிட்டமை, சமீபத்திய வட்டி விகிதங்களின் அதிகரிப்பு, மிக சமீபத்திய கொள்கை கூட்டத்தின் அறிக்கையை வெளியிட்டமை என்பன பவுண்டின் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு மக்கள் ஆணை வழங்கியதை அடுத்து, பவுண்டின் பெறுமதி சடுதியாக பாரிய வீழ்ச்சியை சந்தத்திருந்தது.

எப்படியிருப்பினும், பிரித்தானியப் பிரதமர் தெரசா மே கடந்த மாதம் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பினை வெளியிட்டார். அமெரிக்க டொலருக்கு எதிராக 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் தெரசா மேயின் கையை வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று காலை பவுண்டு சுமார் 0.4 சதவீதம் உயர்வை காட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments