இந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைக்கும் நேரடி வெளிநாட்டு முதலீடு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது கடந்த 2016 ஆம் ஆண்டைவிடவும் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய பல திட்டங்களை இறுதி செய்வதன் ஊடாக 2020 ஆம் ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீட்டை பெறுவதே இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய முதலீடுகளை பல்வேறு துறைகளிலும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.