கனேடிய ரோயல் வங்கியின் நிகர வருமானம் அதிகரிப்பு

Report Print Thayalan Thayalan in வர்த்தகம்

கனேடிய ரோயல் வங்கியின் நான்காம் காலாண்டிற்கான நிகர வருமானம் 12 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பாக 2.54 பில்லியனாகவிருந்த நிகர வருமானமானது, தற்போது 2.84 பில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த வருவாய் அதிகரிப்பானது, தனிப்பட்ட மற்றும் வர்த்தக வங்கிகளின் வலுவான செயற்பாடு, சிறந்த நிர்வாகம் மற்றும் மூலதன சந்தைகளின் மூலம் சாதகமாகியுள்ளது.

ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த கடந்த மூன்று மாத காலத்திற்கான வங்கி லாபமானது, கடந்த 2016ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.65 அமெரிக்க டொலரிலிருந்து 1.88 டொலராக அதிகரித்துள்ளது.

இந்த காலாண்டில் 10.52 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் 6.36 பில்லியன் டொலராக இருந்தது. அவ்வாறாயின் வருவாயானது 12.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்