ரூ.1.80 கோடிக்கு நடந்த மஞ்சள் வர்த்தகம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Report Print Raju Raju in வர்த்தகம்

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் 1.80 கோடிக்கு நடந்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

விரலி மஞ்சள் குவிண்டால் 6,709 முதல் 9,799 ரூபாய், உருண்டை மஞ்சள் குவிண்டால் 6,309 முதல் 7,899 ரூபாய், பனங்காலி (தாய் மஞ்சள்) குவிண்டால் 14 ஆயிரத்து 112 முதல், 24 ஆயிரத்து 500 ரூபாய் வரை ஏலத்தில் விலை போனது.

மொத்தமாக 3,800 மூட்டைகள் மூலம் 1.80 கோடி ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers