தமிழர்கள் உயிரிழப்பு! வேதாந்தா குழுமத்துக்கு பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு

Report Print Kabilan in வர்த்தகம்
339Shares
339Shares
lankasrimarket.com

வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற, பிரித்தானியாவின் எதிர்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர்.

இதனைத்தொடர்ந்து, பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன்பு, லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டு இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பினர்.

மேலும், கைகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இந்த செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், லண்டன் பங்கு சந்தையில் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால், இது தொடர்பாக லண்டன் பங்குச் சந்தை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் 71 சதவித பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்