டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Report Print Kavitha in வர்த்தகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று வர்த்தக நேர முடிவின் போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 72.91 ஆக இருந்தது.

பின்னர் இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 43 காசுகள் சரிந்து 73.34 எனும் நிலையை எட்டியது.

மேலும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers