அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம்

Report Print Kabilan in வர்த்தகம்

இந்தியாவில் அமேசான் ஒன்லைனுக்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய சேவையை துவங்க இருக்கின்றன.

பிரபல ஒன்லைன் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக ஒன்லைன் வலைதளம் ஒன்றை துவங்க உள்ளது.

முகேஷ் அம்பானி தனது ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து, உலகின் முன்னணி ஒன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதன்மூலம் குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவையை இதுவரை சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ரிலையன்ஸ் ரீடெயில் முணையங்கள் இந்தியா முழுக்க சுமார் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்