சர்வதேச சந்தையில் மாற்றம்! தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு

Report Print Fathima Fathima in வர்த்தகம்

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,656-க்கு விற்பனையாகிறது.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் கடந்த 10 நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது.

ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 7-ந் திகதி ரூ.28 ஆயிரத்தை தாண்டியது.

இன்று காலை ஆபரண தங்கம் கிராம் ரூ.3,582-க்கும், ஒரு சவரன் ரூ.28,656-க்கும் விற்பனையானது.

அதாவது நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.13 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.104 அதிகரித்தது. இதனால் சவரன் ரூ.29 ஆயிரத்தை தற்போது நெருங்கியுள்ளது.

கடந்த 1-ந்திகதியில் இருந்து இன்று வரை 10 நாட்களுக்கு தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,176 அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்