இந்திய பங்கு சந்தை கடந்த 6 ஆண்டில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி

Report Print Kavitha in வர்த்தகம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவை விட குறைந்துள்ள நிலையில் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை இன்று சந்தித்துள்ளது

இந்நிலையில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்து 36,562-ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 10,797-ல் வணிகம் நிறைவு பெற்றது.

மேலும் நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்