புதிய ஐபோன்களின் விற்பனையை பாதிக்கும் கொரோனா வைரஸ்: எப்படி தெரியுமா?

Report Print Abisha in வர்த்தகம்

கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளில் உணரப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் தொடர்பிலும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலமையானது புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன்களின் விற்பனையை பாதிக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசிகளின் ஏற்றுமதியானது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சதவீதமானது 36 தொடக்கம் 40 மில்லியன் வரையான கைப்பேசிகளை குறிக்கின்றது.

இப் பாதிப்புக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அச்சுறுத்தல் தொடருமாயின் புதிய ஐபோன் விற்பனையும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்