பங்குச்சந்தைகளில் கடும் சரிவு..30 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி!

Report Print Kavitha in வர்த்தகம்

கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிற நிலையில் இதன் எதிரொலியாக இன்று இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு காணப்படுகின்றாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது என்பது தெரியவந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1900 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 33,767 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

இதுபோலவே தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் 585 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து 9,875 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...