இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்

Report Print Vethu Vethu in வர்த்தகம்

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் ரூபாவாகும்.

22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக காணப்படுவதுடன், செய்கூலி மற்றும் சேதாரத்துடன் 22 கரட் தங்க நகையின் இன்றைய விலை 97,000 ரூபாவாகும்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னைய காலப்பகுதியில் ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்