கனடாவில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதல் மக்கள் அரங்கம்

Report Print Gokulan Gokulan in கனடா
116Shares
116Shares
lankasrimarket.com

'தமிழர் தலைவிதி தமிழர் கையில்' எனும் முழக்கத்துடன் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது மக்கள் அரங்கம் கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பே சிறந்த பொறிமுறையாக அமையும் என்ற நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை (Yes To Referendum ) உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நாவின் மேற்பார்வையில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களிடத்தில், அவர்களே தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என கோரிக்கையுடன் தனது செயற்பாட்டை இந்த இயக்கம் கொண்டுள்ளது.

இதனுடைய முதல் மாநாடாக 'மக்கள் அரங்கம்' கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிறன்று Metropolitan Centre, 3840 Finch Ave E, Toronto ON M1T 3T4 எனும் இடத்தில் மாலை 3மணிளவில் நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில் இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு, பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்துவது மட்டுமல்ல, அச்செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்த சர்வதேச அறிவாளர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தென்சூடான், குர்திஸ்தான், கத்தலோனியா போன்ற் பிராந்தியங்களின் நடைபெற்றிருந்த பொதுவாக்கெடுப்பின் அனுபவங்கள் ஆய்வு செய்யப்பட இருப்பதோடு, ஈழத் தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்புக்குரிய செயல்வழிப்பாதை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 'ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும்.

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களதும், அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்