சாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்

Report Print Peterson Peterson in கனடா
சாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்

கனடா நாட்டில் 89 வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கனரக லொறி ஒன்று மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

வான்கூவர் நகரில் உள்ள East Hastings என்ற பகுதியில் தான் இந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பகுதியில் மூதாட்டி நடந்து சென்றுள்ளார்.

அப்போது, வாகனங்கள் செல்வதற்கான சிக்னல் விழுந்துள்ளது. ஆனால், மூதாட்டி இதனை கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் சாலையை அவர் கடக்கும்போது பின்னால் வந்த நீளமான லொறி ஒன்று இடப்பக்கமாக திரும்பியுள்ளது.

லொறியின் ஓட்டுனரும் சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியை கவனிக்க தவறியுள்ளார்.

லொறி வளைவில் திரும்பிய அதேநேரம் மூதாட்டி மீது பலமாக மோதியுள்ளது. படுகாயம் அடைந்த மூதாட்டி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து நிகழ்ந்துள்ளதை அறிந்த லொறியின் ஓட்டுனர் தப்பிக்காமல் அங்கேயே நின்று பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார்.

சாலையில் இருந்த பாதசாரிகள் பேசியபோது, சிக்னலை மீறி மூதாட்டி நடந்துச் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதசாரிகள் மீது வாகனம் மோதி கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இந்த மூதாட்டியுடன் ஏழாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments