கனடாவில் சீக்கிய வாலிபர் மீது இனவெறி தாக்குதல்!

Report Print Basu in கனடா
கனடாவில் சீக்கிய வாலிபர் மீது இனவெறி தாக்குதல்!

கனடாவில் சீக்கிய வாலிபரை அடித்து உதைத்ததுடன் இனவெறியாக பேசிய இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வரும் சுபிந்தர் சிங் கெரா (வயது 29) என்ற சீக்கிய வாலிபர், கடந்த மார்ச் மாதம் கியூபிக் நகரில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கபிரியேல் ராயர் டிரம்லே (22) என்ற வாலிபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கெராவை பார்த்து பிரெஞ்சு மொழியில் வசை பாடியுள்ளார்.

பின்னர் அவரது தலைப்பாகையை சுட்டிக்காட்டி இனவெறியாக பேசிய அவர், கெராவின் முகத்தில் தாக்கியும், அவரை உதைத்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிசார், கபிரியேல் மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர்.

இந்த இனவெறி தாக்குதல் சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது கபிரியேல் ராயருக்கு கனடா நீதிமன்றம் 10 மாதம் சிறை தண்டனை விதித்து உள்ளது.

இந்த வழக்கில் இருந்து அவரது நண்பர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments