கனேடிய தம்பதியை அமெரிக்காவில் கொலை செய்த குற்றவாளி மெக்ஸிகோவில் கைது

Report Print Fathima Fathima in கனடா

கனடா நாட்டை சேர்ந்த தம்பதி இருவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க குடிமகன் ஒருவர் மெக்ஸிகோ நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் உள்ள பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த Patrick Shunn(45) மற்றும் Monique Patenaude(46) என்ற தம்பதி அமெரிக்க தலைநகரமான வாஷிங்டனில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடிமகனான John Blaine Reed(53) என்பவர் தம்பதி இருவரையும் கொடூரமாக சுட்டு கொலை செய்துவிட்டு உடல்களை புதைத்துள்ளனர்.

இந்த கொலைக்கு ரீடின் சகோதரரும் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்த ரீட் மீது நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து அவரை அரிசோனா சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.

ஆனால், சகோதர் இருவரும் அமெரிக்காவை விட்டு வெளியேறி மெக்ஸிகோவில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்க பொலிசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ரீட்டின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியான ரீட் மெக்ஸோவில் உள்ள Sonora நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அமெரிக்க பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ரீட்டை அமெரிக்காவிற்கு கொண்டு வர தற்போது பொலிசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments