கப்பலில் இடம் பெயர்ந்து கனடாவில் கலக்கி வரும் இளைஞன்

Report Print Arbin Arbin in கனடா
கப்பலில் இடம் பெயர்ந்து கனடாவில் கலக்கி வரும் இளைஞன்

இலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து வந்து புலம்பெயர் தேசங்களில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வரிசையிலே டின்சன் வன்னியசிங்கம் என்பவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கப்பலில் 4 மாதங்களாக பயணித்து கனடா வந்தடைந்தார். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து Sunsea இசைப்பள்ளியையும் இசைக்குழுவையும் நடத்த இருக்கிறார்.

Keyboard, piano, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற இவர் இக்கலைத்துறையில் சாதிக்க மிகவும் கடின உழைப்பையும் நேர்த்தியான ஆசிரியர்களின் வழிநடத்தலில் வாத்தியங்களையும் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunsea என்ற பெயரை எதற்காக வைத்திருக்கிறார் என்று கேட்ட போது "நான் வந்த கப்பலின் பெயர் Sunsea, நான் இந்த கனடா நாட்டுக்கு வந்த பயணத்தை இன்னும் மறக்கவில்லை, என்னுடைய இறந்த காலத்தை இன்னும் மறக்கவில்லை, அதனால் தான் நான் வந்த கப்பலின் பெயரையே எனது இசைப்பள்ளிக்கும், குழுவுக்கும் வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.

எதிர்வரும் August 6ஆம் திகதி இவருடைய Sunsea இசைப்பள்ளி மற்றும் இசைக்குழுவை வெகு சிறப்பாக ஆரம்பித்து வைக்க உள்ளார். இவருடைய இடைவிடாத முயற்சிக்கு லங்காசிறியின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments