போக்கிமேனை தேடிய இளைஞர்களை துப்பாக்கியால் சுட்ட பெண்

Report Print Fathima Fathima in கனடா

கனடாவில் போக்கிமேனை தேடி வந்த இளைஞர்களை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் போக்கிமேன் கோ விளையாட்டு பலரும் அடிமையாகி வருகின்றனர்.

சமீபத்தில் கனடாவில் சில இளைஞர்கள் போக்கிமேனை தேடி தெரு தெருவாக சென்றுள்ளனர். இறுதியில் வீட்டின் மேற்பரப்பில் ஏறி போக்கிமேனை தேடியுள்ளனர்.

அவ்வீட்டில் வசிக்கும் பெண், வீட்டின் மேற்பரப்பில் சத்தம் வருவதை கேட்டு அதிர்ந்து வெளியே வந்துள்ளார்.

வீட்டின் மேற்பரப்பில் இருக்கும் இளைஞர்கள் போக்கிமேனைத்தேடி வந்துள்ளனர் என்பதை அறிந்து, ஆத்திரத்தில் வீட்டினுள் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுடத் தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போக்கிமேனைத் தேடி தன் வீட்டின் கூரை மீது ஏறியதால் ஆத்திரத்தில் சுட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments