கனடாவில் வளர்ந்து வரும் இனங்களில் ஒன்றான தமிழர்களிடையே மாகாண அரசியலில் பிரபல்யமாகும் இரு தமிழர்கள் மீது ஒரேநேரத்தில் காழ்ப்புணர்வுத் தாக்குதல்கள் தேசிய ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டள்ளன.
எதிர்வரும் 2018ம் ஆண்டுப் பொதுத் தேர்தலை இலக்காக வைத்தே ஒன்றாரியோ லிபரல் கட்சி மற்றும ஒன்றாரியோ முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சிகளிலுள்ள தமிழர்களை நோக்கி, இத்தகைய ஒரு பக்கசர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும்,
1990க்களின் இறுதியில் தமிழர்கள் மீதான கோரப்பார்வையைப் பகிர்ந்த நிலையை இது ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வியை ஆரோக்கியமான நிலையிலுள்ள தமிழ்ச் சமுதாயப் பிரதிநிதிகள் எழுப்பியுள்ளனர். தமிழ்ப் பெண்கள் விடுதலைப் போருக்காக கனடாவில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்ற எந்தவித உண்மையுமற்ற செய்திகளை,
ஆதாரங்கள் ஏதும் பகிராத நபர்களின் கூற்றுக்கு இணங்கி அந்தக் காலத்தில் பகிர்ந்து கொண்டதன் மூலம் கனடியப் பத்திரிகைகள் நேர்மைவாதம், நியாயம் பால் தங்களின் பங்களிப்பை வழங்குபவை என்ற கோட்பாட்டிலிருந்து விலகியிருந்தன.
அதன் தொடர்ச்சியான செயற்பாடாக இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தில் ஒன்றாரியோ மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்ற் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்ட பிரகல் திருவை மையப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ள ரொறன்ரோ சண் பத்திரிகை,
தோற்ற வேட்பாளர்களை அரசமயப்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களின் இயக்குனர்சபைகளில் நியமிப்பது லிபரல் கட்சியின் வழக்கம், எனவே பிரகல் திரு மீது ஒரு பார்வையை ஒன்றாரியோ வாக்காளர்கள் வைத்திருக்க வேண்டும் அவர் எங்கே நியமனம் பெறப் போகின்றார் என்பதை அறிய வேண்டும் என்ற பாணியிலான கட்டுரையையும்
அதே போல ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகை, முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் பாபு நாகலிங்கம் என்பவரை முற்றாக நம்புவதாகவும், “பாபு தான் முன்னேற்றவாதக் கட்சி” என்ற அளவில் பாபுவிற்கு இடம்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து,
பல ஒரு தரப்புத் தகவல்களை பிரசுரித்துள்ளது. இருந்த போதும் 1999க்களில் இருந்த நிலையில் இப்போதைய தமிழ்ச் சமூகம் இல்லையென்பதை உணர்த்தி இவர்களின் தவறுக்கு மேற்படி பத்திரிகைகளை பதில்கூற தமிழர்கள் வைப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழரொருவர் வெளியிட்டார்.