விமான விபத்தில் சிக்கி முன்னாள் முதலமைச்சர் மரணம்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி அந்நாட்டை சேர்ந்த முன்னாள் மாகாண முதலமைச்சர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் அல்பேர்ட்டா மாகாண முதலமைச்சராக கன்செர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த Jim Prentice(60) என்பவர் 2014 முதல் 2015ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்துள்ளார்.

முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு முன்னராக மூன்று முறை அமைச்சராக ஜிம் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Kelowna என்ற நகரில் நண்பர்களுடன் கோல்ப் விளையாடி விட்டு சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

ஜிம் மற்றும் அவருடைய மகளின் மாமனார் உள்பட 4 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 9.32 மணியளவில் விமானம் புறப்பட்டுள்ளது.

சுமார் 6,000 மீற்றர் உயரத்தில் விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது சுமார் 10.15 மணியளவில் ராடார் கருவியில் இருந்து விமானம் மாயமாக மறைந்துள்ளது.

இச்செய்தி வெளியானதை தொடர்ந்து விமான நிறுவனம் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர்.

பின்னர், விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் பயணித்த முன்னாள் முதலமைச்சர் உள்பட 4 பேரும் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

முன்னாள் முதலமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கனடா நாட்டின் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் முன்னாள் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜிம்மின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments