மதுபோதையில் கார் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்து: பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் நபர் ஒருவர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தாய் மற்றும் அவருடைய மகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Markham நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே நகரை சேர்ந்த 42 வயதான தாய் ஒருவர் தனது 4 வயதான மகளுடன் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, மற்றொரு காரில் 28 வயதான நபர் தனது ஒரு வயது குழந்தையுடன் காரை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், Bur Oak என்ற பகுதிக்கு வந்தபோது இரண்டு கார்களும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தை தொடர்ந்து தாய் மற்றும் மகள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய நபர் மற்றும் அவரது ஒரு குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

கிறிஸ்டோபர் சிங் என்ற பெயருடைய அந்நபரை பரிசோதனை செய்தபோது அவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

கிறிஸ்டோபர் சிங்கை தற்போது ஆதாரப்பூர்வமாக கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments