கனடாவின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பேச்சுவார்த்தை முடிவு எட்டாமல் முடிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் பொருட்டு கனேடிய வர்த்தக அமைச்சர் கிறிஸ்டியா பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார்.

இதனிடையே குறித்த ஒப்பந்தம் தொடர்பாக பெல்ஜியம் பகுதியில் உள்ள 36 லட்சம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு ஒரு சுமூக முடிவுக்கு எட்டும் வரை குறித்த ஒப்பந்தம் நடைமுறை சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாதது வருத்தமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் கிறிஸ்டியா, ஆனால் இந்த ஒப்பந்தம் சாத்தியமற்ற ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

குறித்த வர்த்தக ஒப்பந்த நிறைவேறினால் முதலீட்டாளர்களுக்கான புது நீதிமன்றம் அமைக்கப்படும், ஒத்திசைவான கட்டுப்பாடுகள் அமையும், ஸ்திரமான வளர்ச்சி மற்றும் பல்வேறு அம்ஸங்கள் நடைமுறை சாத்தியமாகும் என நம்பப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments