கனடாவில் தஞ்சமடைந்த சீன நாய்கள்: என்ன காரணம்?

Report Print Fathima Fathima in கனடா

சீனாவை சேர்ந்த 110 நாய்கள் கூண்டில் அடைக்கப்பட்டு கனடாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன, இங்கு அவைகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் என Humane Society International அறிவித்துள்ளது.

சீனாவில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா நடைபெறும், அன்றைய தினம் சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்படும்.

நாய்கறியை உண்டு சந்தோஷமாக பொழுதை கழிக்கும் மக்கள், டிசம்பர் மாதத்திற்கு தேவையான சக்தியை நாய்கள் அழிப்பதாக கருதுகின்றனர்.

இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன, இந்நிலையில் கனடாவை சேர்ந்த Humane Society International சங்க உறுப்பினர்கள் சீனாவுக்கு சென்று அங்கு யுலின் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை அழைத்து வந்தனர்.

கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 110 நாய்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன, இவைகள் கனடாவில் சுதந்திரமாக வாழும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments