பேருந்தையே விழுங்கிவிடும் நிலையில் திறந்த பாரிய புதைகுழி!

Report Print Arbin Arbin in கனடா

தெருவில் திறக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றினால் பாடசாலை பேரூந்து ஒன்றின் பின்புறம் தரைக்குள் விழுங்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் காலை 9மணியளவில் வெஸ்ரன் வீதிக்கும் சென்.கிளையர் அவெனியு வடக்கிற்கும் இடையில் ஹில்போன் அவெனியுவில் நடந்தது.

பேரூந்து ஹில்போன் வீதியை கடந்து செல்கையில் தரை பிளந்ததால் வண்டி திடீரென சரிந்துள்ளது. பேரூந்தின் பின்பகுதி திறந்து கொண்டிருந்த புதைகுளிக்குள் சரியத்தொடங்கியது.

ஆனால் தாக்கு பிடிக்க கூடய வேகத்தில் வண்டி இருந்ததால் ஆபத்து ஏற்படவில்லை. புதைகுழியில் இருந்து சிறிது தூரத்தில் வாகனம் நிறுத்தத்திற்கு வந்தது.

குழி 2-மீற்றர்கள் ஆழத்திற்கு திறந்துள்ளது. விபத்து நடந்த சமயம் பேரூந்திற்குள் பிள்ளைகள் எவரும் இருக்கவில்லை. எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments