கனடாவில் அதிகரிக்கும் மாரடைப்பு, பக்கவாத நோய்கள்: என்ன காரணம்?

Report Print Arbin Arbin in கனடா
437Shares
437Shares
lankasrimarket.com

கனடாவில் பாரிய பனிப்புயல் தாக்கும்போது இதய நோய் பிரிவு பிசியாக இருக்கமாட்டாத போதிலும் புயலின் இரண்டு நாட்களின் பின்னர் மாரடைப்பு அதிகரிப்பதை வைத்தியசாலைகள் எதிர்நோக்குகின்றன என புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கனடாவில் பலத்த பனிப்புயல் ஏற்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் மருத்துவமனைகளில் மாரடைப்பு சம்பந்தப்பட்ட அனுமதிகள் 23சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஹாவாட் பாடசாலை பொது சுகாதார ஆய்வு எச்சரிக்கின்றது.

கனடா இன்னமும் குளிரின் பிடியில் உள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை -32 C முதல் 2 C – இருப்பதோடு எதிர் வரும் வாரங்களில் பனி இன்னமும் இருக்கும் என கணிக்கப்படுகின்றது.

உலக காலநிலை மாற்றத்துடன் பாரிய பனிப்புயல்கள் மேலும் மேலும் அடிக்கடியும் கடுமையாகவும் காணப்படலாம்.

மேற்படி ஆய்வு பொஸ்ரனில் உள்ள நான்கு பெரிய மருத்துவமனைகளில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை 2010லிருந்து 2015ற்குள் அனுமதிக்கப்பட்ட 433,000ற்கும் மேற்பட்ட வயதானவர்களை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டது.

இருதய நோய் அனுமதிகள் 12முதல் 25 சென்ரிமீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு நாட்களில் அதிகரிக்கின்றன.

இறுதியாக குளிர் சம்பந்தப்பட்ட அனுமதிகள் பனிப்பொழிவு நாட்களில் 3.7சதவிகிதத்தால் அதிகரிக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

26 முதல் 36சதவிகிதம் இறப்புக்கள் மாரடைப்பு இதய செயலிழப்பு அல்லது மற்றய இருதய நோய்கள் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்திலேயே அதிகமாக ஏற்படுகின்றன எனவும் ஆய்வு தெரிவிக்கின்றது.

குளிர் காலம்பற்றிய மற்றொரு சுவாரசியமான நிகழ்வுகள் என்னவென்றால் உடலின் இரத்தம் தானாகவே கெட்டியடையடைந்து குளிரில் வெளிப்படும் போது உறைகின்றது என கூறப்படுகின்றது. குளிர்காலம் காய்ச்சல் பருவத்திற்கும் பெயர் போனது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments