சாலை விபத்தில் கவிழ்ந்த லொறி: 2 நாட்களாக வெளியேற முடியாமல் தவித்த ஓட்டுனர்

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய லொறி ஓட்டுனர் இரண்டு நாட்களாக வாகனத்தை விட்டு வெளியேற முடியாமல் போராடி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Summerside நகரில் Pat Gaudet(45) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

லொறி ஓட்டுனரான இவர் தினமும் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று பல இடங்களில் டெலிவரி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பொருட்களை ஏற்றிய ஓட்டுனர் லொறியில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சில நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு Rhododendron என்ற பகுதியை அடைந்தபோது லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியுள்ளது.

மேலும், தடுப்புச் சுவற்றை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அவரால் வெளியேவும் வர முடியவில்லை.

கணவரை காணாமல் மனைவி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு நாட்களாக அவரை தேடும் பணி நீடித்து வந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் தேடியபோது பள்ளத்தில் லொறி கவிழ்ந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு லொறிக்கு அடியில் சிக்கியிருந்த ஓட்டுனரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஓட்டுனர் அபாயகரமான நிலையில் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டார்.

எனினும், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையிலும் அவை பலனளிக்காத காரணத்தினால் கடந்த சனிக்கிழமை அன்று ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments