கடற்கரை அரிப்பினால் குறிப்பிடத்தக்க நிலச்சரிவு ஆபத்துக்கள்

Report Print Gokulan Gokulan in கனடா

ரொறொன்ரோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் ஸ்காபுரோ பிளவ்சின் மேல் மற்றும் அடித்தளங்களை விட்டு விலகி இருக்குமாறு பார்க் பாவனையாளர்களை எச்சரிக்கின்றது.

இந்த வருடம் இடம்பெற்ற “குறிப்பிடத்தக்க” பல நிலச்சரிவுகளே இதற்கு காரணமாகும்.

ஏப்ரல் மே மாதங்களில் கிட்டத்தட்ட 15- நிலச்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுவாக ஒவ்வொரு இரண்டு வருடங்களில் குறைந்தது ஒரு சிறிய அளவு இடம்பெற்றுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை மற்றும் லேக் ஒன்ராறியோவின் நீர்மட்ட அதிகரிப்பு காரணமாக குன்றுகளிலிருந்து துண்டுகள் விழுவதுடன் தண்ணீருக்கு அருகாமையில் உள்ள பார்க்கின் வழிகளையும் அரிக்கின்றன.

இந்த மாதம் ரொறொன்ரோ நகரமும் TRCA ஆணைய பணியாளர்களும் கில்ட் கட்டுமான அணுகல் பாதை மற்றும் டொரிஸ் மக்கார்தி அடிச்சுவட்டையும் பொது அணுகல்களிற்கு தடை செய்தனர்.

இப்பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி குறித்து ஆய்வுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்கால மழை பொழிவினால் கடற்கரை அரிப்பு குறித்து பார்க் பாவனையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கணிக்க முடியாத நீர் மட்டம் காணப்படுவதால் இக்கால கட்டத்தில் நீர்மட்டத்தை விட்டு விலகி இருப்பது பாதுகாப்பானதாகும். காற்றும் அலைகளும் எப்போது செயற்படும் என்பது தெரியாது என கூறப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments