ஒன்ராறியோவில் வசிக்கும் மக்களுக்கான முக்கிய தகவல்

Report Print Mohana in கனடா

காய்ச்சல் பருவகாலம் அண்மித்து கொண்டிருக்கையில் அக்டோபர் 23 முதல் இலவச காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்படும் என ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது.

இலவச ஊசி பொது சுகாதார கிளினிக்குகள், பங்கேற்கும் மருந்தகங்கள் மற்றும் சில மருத்துவர் மற்றும் செவிலியர் பயற்சியாளர் காரியாலயங்களிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசி ஆறு மாதம் மற்றும் வயதானவர்களிற்கு கிடைக்கும் ஆனால் மருத்துவர்கள் குறிப்பாக அதிக ஆபத்துள்ளவர்களிற்கு பரிந்துரைக்கின்றனர்.

நாட்பட்ட இதய நோய் அல்லது நுரையீரல் நோய் போன்ற ஆபத்து காரணிகளை கொண்டிருந்தால் அல்லது 65வயதிற்கு மேற்பட்டவர்களாக அல்லது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் அல்லது கர்ப்பினி பெண்கள் முக்கியமானவர்கள் என கூறப்படுகின்றது.

காய்ச்சல் கிளினிக் இடங்கள் குறித்த தகவல்களை உள் ஊர் சுகாதார பிரதேச வலைத்தளம் அல்லது பொது சுகாதார காரியாலத்துடன் அல்லது சுகாதார லைன் 811மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers