ஏழு வயது கனடிய சிறுமிக்கு விமானத்தில் நடந்த அவலம்

Report Print Mohana in கனடா

தானும் தனது மகளும் பிரிட்டிஷ் எயர் வேய்ஸ் விமானத்தில் மூட்டை பூச்சி கடியினால் மூடப்பட்ட நிலையில் விடப்பட்டதாக தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடா-வன்கூவரை சேர்ந்த 38-வயது ஹொர் ஷிசிலாஜி இவரது மகள் இருவரும் வன்கூவரில் இருந்து லண்டன் நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் மூட்டை பூச்சிகள் அவரது இருக்கைக்கு மேலாக ஊர்ந்து செல்வரை கண்டுள்ளார்.

இதனை விமான பணியாளர்களிடம் இரு தடவைகள் தெரிவித்த போதிலும் இவர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை.இவரது ஏழு வயது மகள் மோலிக்கு ஏராளமான வலி நிறைந்த கட்டிகள் ஏற்பட்டது. மூட்டை பூச்சிகள் தொலைக்காட்சி திரையின் பின்னால் இருந்து வந்து கொண்டிருப்பதை தாயார் கண்டார்.

சாப்பாடு வந்தது. சாப்பாட்டு தட்டை தனது மடியில் வைக்க முனைந்த போது ஆளி விதை போன்று ஒன்று தெரிய-ஆனால் அது அசைய ஆரம்பித்துள்ளது-அது ஒரு மூட்டை பூச்சி.

நித்திரையான போது மகளின் தொடையில் சிறு கடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. நித்திரை விட்டு எழுந்த சமயம் பல இடங்களில் கடித்த காயங்கள். மிக மோசமாக இருந்துள்ளது. இரத்தம்; வடிய தொடங்கிவிட்ட நிலை.

வீடு நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் லண்டனில் தரித்த சமயம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் விமன நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers