அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கனேடிய பெண்

Report Print Thayalan Thayalan in கனடா

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக சர்வதேச அமைப்புகளுடன் நெருங்கி பணியாற்றிய கனேடிய பெண்ணொருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா அணு குண்டு தாக்குதலில் உயிர்த்தப்பியவரும், அணுவாயுத எதிர்ப்பிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவருமான 85 வயதுடைய Setsuko Thurlow என்பவருக்கே அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது.

1945ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை காவுகொண்ட ஹிரோஷிமா அணு குண்டு தாக்குதல் இடம்பெற்றபோது குறித்த பெண்ணுக்கு 13 வயது.

தாக்குதலில் உறவினர்கள், நண்பர்களை இழந்து தவித்துவந்த பெண், 1955ஆம் ஆண்டு திருமணத்தின் பின்னர் ரொறன்ரோவில் குடியேறினார். அந்த நாள் முதல் அவர் உலகளாவிய ரீதியில் ஆயுத பரவலை எதிர்த்து போராடுவதற்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

அதன்படி அணு ஆயுத ஒழிப்பிற்காக சர்வதேச அமைப்புகள் நெருங்கி பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்