பிளாஸ்டிக் கழிவுடன் நதியில் கிடைத்த மீன்: அதிர்ந்து போன இளைஞர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள நதியில் மீன் ஒன்றின் உடலில் இறுக்கமான பிளாஸ்டிக் கயிறு சுற்றியிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை அவிழ்த்து மீனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்

ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சாஸ்கட்சுவான் நதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆடம் டர்ன்புல் என்பவரின் கையில் தான் குறித்த மீன் கிடைத்துள்ளது.

நதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பலர் கொட்டி வரும் நிலையில் அதில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கயிறு ஒன்று நதியில் இருந்த மீன் உடலை இறுக்கமாக சுற்றியுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த மீன் வளர்ந்து வந்துள்ளது. ஆடம் வீசிய வலையில் அந்த மீன் சிக்கியதையடுத்து மீன் உடலில் பிளாஸ்டிக் சுற்றியிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

மீனை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஆடம் பதிவேற்றியுள்ளார். அந்த பதிவில் உங்கள் குப்பைகளை எடுத்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் நீரில் கொட்டப்படுவதால் அதில் வாழும் ஜீவன்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆடம் இதை செய்துள்ளார்.

பேஸ்புக் பதிவானது 11000 முறை பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இதன் பின்னர் மீன் உடலில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கயிற்றை அவிழ்த்து மீண்டும் அதை நதியிலேயே ஆடம் விட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...