கனடா யுவதிக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in கனடா

கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் போதைமருந்து கடத்திய வழக்கில் கனடிய பெண்ணுக்கு 7 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Québec மாகாணத்தை சேர்ந்த Isabelle Lagacé (29) என்ற பெண்மணி கடந்த 2016 ஆம் ஆண்டு 35 கிலோ கோகைனை தனது சூட்கேசில் மறைத்து வைத்து அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி வந்துள்ளார்.

அவுஸ்திரேலிய எல்லைப்பகுதியில் அதிகாரி Tim Fitzgerald நடத்திய சோதனையில், Isabelle Lagacé சிக்கியுள்ளார். இவருடன் சேர்ந்து மற்ற இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது, விசாரணையில் Isabelle Lagacé, இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் சொகுசு கப்பலான Sea Princess- இல் பயணம் செய்துள்ளார், அதுமட்டுமின்றி அதிகமாக பயணங்களை மேற்கொள்ளும் இவர் அதுதொடர்பான புகைப்படங்களையும் தனது சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

போதைப்பொருளை கடத்துவதற்காகவே இந்த பயணங்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்தது, மேலும் விசாரணையில் இவர் கோகைன் கடத்தியது உறுதிசெய்யப்பட்டதால் 7 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Isabelle Lagacé கூறியதாவது, இது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது, தற்போது எனது வாழ்நாளை சிறைக்குள் அனுபவிப்பதை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்