மக்களை காப்பாற்ற தன்னுயிரை பறி கொடுத்து ஹீரோவான பொலிஸ் அதிகாரி!

Report Print Mohana in கனடா
132Shares
132Shares
lankasrimarket.com

பிரிட்டிஷ் கொலம்பியா அபொட்ஸ்வோர்ட்டை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஒரு ஹீரோ என நினைவு கூரப்பட்டார்.

வாகனம் நிறுத்துமிடம் ஒன்றில் நின்ற மக்களை மனிதனொருவன் சுட முயன்ற போது அவனுடன் துப்பாக்கி பரிமாற்றம் செய்து போராடியதில் அதிகாரி இறந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.திங்கள்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.

காலை 11.30மணியளவில் திருட்டு வாகனம் குறித்த தகவல் பிரகாரம் அதிகாரிகள் குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

சந்தேக நபரின் வாகனத்தை அழைப்பு விடுத்தவர் தடுத்து பொலிசார் வருகைக்கு காத்திருந்ததாக கூறப்படுகின்றது.

எதிர்பாராத விதமாக ஆண் சந்தேக நபர் ஒருவர் வாகனத்திலிருந்து வெளியேறி சுட ஆரம்பித்துள்ளான்.

பல 911 அழைப்புக்கள் பொலிசாருக்கு விடப்பட அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்து சந்தேக நபரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அதிகாரி ஒருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன் பயங்கரபகுதி என்னவென்றால் காயமடைந்த அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் 60-மதிக்கத்தக்க அல்பேர்ட்டாவை சேர்ந்தவர். வாகனத்தில் தப்பி ஓட அதிகாரிகள் துரத்தி சென்று கைது செய்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆபத்தான காயங்கள் ஏதும் இல்லை.

இறந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. விசாரனை தொடர்கின்றது.

அதிகாரிகள் வீரம் மிகுந்தவர்களாக செயற்பட்டு மக்களை காப்பாற்றுகின்றனர்.

குறிப்பிட்ட சந்தேக நபர் மக்களை கொல்ல முயன்றான். பொது அங்கத்தவர்கள் மற்றும் எங்கள் அதிகாரிகள் பதிலளித்தனரென கூறப்பட்டது.

கடந்த வார இறுதியில் திருடப்பட்ட ஒரு ஸ்போட்ஸ் வாகனம் இந்து சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முதல்வர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்