கனடாவில் நடந்த விபத்தில் வெளியான அதிர்ச்சி: காரணம் இது தான்

Report Print Kabilan in கனடா
533Shares
533Shares
lankasrimarket.com

கனடாவின் இரு வாகனங்களுக்கு இடையே நடந்த விபத்தில், ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் நிர்வாண நிலையில் இருந்தது பரபரப்பாகியுள்ளது.

அல்பெர்ட்டா மாகாணத்தின் Leduc நகரில் அமைந்துள்ள கிராம புறசாலையில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அதில் ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், ஒரு வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் நிர்வாண நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர்களை கைது செய்த பொலிசார் அதில் நான்கு பேரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இது விபத்தாக இருக்க முடியாது எனவும், போதைப்பொருள் உபயோகம் அல்லது மது போதையில் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்