2 மில்லியன் டொலர் மதிப்பிலான நகை கொள்ளை: வெளியானது மர்ம நபரின் புகைப்படம்

Report Print Arbin Arbin in கனடா
277Shares
277Shares
lankasrimarket.com

கனடாவின் டொராண்டோ மாநகரில் 2 மில்லியன் டொலர் மதிப்பிலான நகைகளை கொள்ளையிட்டு தப்பிய மர்ம நபரது புகைப்படத்தை வெளியிட்டு நகர பொலிசார் உதவி கோரியுள்ளனர்.

டொராண்டோ மாநகரில் King Street West மற்றும் Duncan Street ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுங்க இலாகா அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை குறித்த நபர் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி நடந்த இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு பலர் தகவல் அளித்துள்ள நிலையில்,

பொலிசார் மெற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, கொள்ளையில் ஈடுபட்டது 38 வயதான Robert Robin Cropearedwolf என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொலிசார், அதில் பதிவான புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சுமார் 6 அடி உயரமும் 145 பவுண்ட்ஸ் எடையும் கொண்ட அந்த நபர் குறித்த தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்