குடும்பத்தை கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட நிர்வாண குழு: பொலிசில் சிக்கியதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in கனடா
263Shares
263Shares
lankasrimarket.com

கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட குடும்பம் ஒன்றை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட நிர்வாண குழுவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த கார் சாலையில் சென்ற லொறி ஒன்றுடன் மோதிய பின்னரே தொடர்புடைய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கனடாவின் Laduc County பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணி அளவில் குறித்த நிர்வாண குழுவானது 6 வார கைக்குழந்தை, அதன் தாயார், அவரது தந்தை உள்ளிட்டவர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

இதனிடையே இவர்கள் சென்ற கார் சாலையில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து சம்பவப்பகுதிக்கு பொலிசார் வரவும் கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் விபத்துக்குள்ளாகி நின்ற காரில் இருந்து கைக்குழந்தையுடன் அந்த தாயார் தப்பிக்கவும், தொடர்ந்து அவரது தந்தையும் தப்பித்துள்ளார்.

இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள், இரண்டு சிறுமிகள், மற்றும் ஆண் ஒருவரை கைது செய்த பொலிசார், அவர்களில் 4 பேரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதில் 3 பேர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், குறித்த 5 பேரும் ஏன் ஆடை இன்றி நிர்வாணமாக இருந்தனர் என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்